திருப்பதி: கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால் நேற்று ஒரே நாளில் திருமலை திருப்பதி ஏழுமலையானை ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.
கோடை விடுமுறை முடிவுபெற உள்ள தருவாயில், திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் திருப்பதியில் தெலுங்கு தேச கட்சி மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருமலைக்கு வந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை சுமார் ஒரு லட்சம் பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
மேலும் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். இது இந்தாண்டின் முதல் பெரிய பதிவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.