முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் ரூ.3000 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

இந்தியா

ராஜஸ்தானில் ரூ.3000 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

புதுதில்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தில்லியில் இன்று மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை ஆணை யத்தின் தலைவர் நஜீப் ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள 'மருதர் ட்ரிங்க்ஸ்' என்ற தனியார் நிறுவனத்தில், ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனய்வு துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு ரகசிய அறையில் , அட்டைப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி மாண்ட்ரக்ஸ்  போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதன் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3000 கோடி ஆகும்.

இதை அதிக  அளவில் எடுத்துக் கொண்டால் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் உண்டு. இந்த மாத்திரைகள் அனைத்தும் மொசாம்பிக் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு கடத்தும் நோக்கத்துடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பான முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு நஜீப் ஷா தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →