திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது!
கர்நாடக மாநிலத்தில் இன்று கொண்டாடப்படுப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய, அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டார்.
இந்தியாதிப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது!
கர்நாடக மாநிலத்தில் இன்று கொண்டாடப்படுப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய, அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்று கொண்டாடப்படுப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய, அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலத்தில் இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை எதிர்த்து போராட்டம் நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான எடியூரப்பா அறிவித்திருந்தார்.
அதன்படி பாஜக தொண்டர்கள் பெங்களூரில் உள்ள டவுன் ஹாலில் போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற எடியூரப்பா தொண்டர்களுடன் இணைந்து திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக சார்பில் இந்த போராட்டத்தின் மூலம் நாங்கள் முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை மட்டும்தான் எதிர்க்கிறோம்
இவ்வாறு அவர் தெரிவித்தார். இதேபோல் கர்நாடக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய 48 பாஜக தலைவர்கள் கைது செய்ப்பட்டனர்.