இந்தியா

மான் இறைச்சி உண்ட இருவர் கைது!

ராஜஸ்தான், பிகானிரில் அரைகுறையாகச் சமைக்கப் பட்ட மான் இறைச்சி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

கார்த்திகா வாசுதேவன்

ராஜஸ்தான், பிகானிரில் அரைகுறையாகச் சமைக்கப் பட்ட மான் இறைச்சி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. நேமிசந்த் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவரும் அவரது நண்பர் சுந்தர் லால் நாயக்கும் மான் இறைச்சி சமைத்து உண்டது நிரூபணமானது. பிடிபட்டது மான் இறைச்சி தானா!? என்பதை உறுதி செய்வதற்கான அடிப்படைச் சோதனைகளை போலீஸார் மேற்கொண்டதில், சோதனை முடிவுகள் அது மான் இறைச்சி தான் என்பதை உறுதி செய்துள்ளன. மான் இந்தியாவில் அரிதாகி வரும் வன விலங்குகளில் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளதால் மான் வேட்டையாடுவதும், மான் இறைச்சி வாங்கி, சமைத்து உண்பதும் இந்திய தண்டனைச் சட்டப்படி பெருங்குற்றம். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ‘அவர்களுக்கு மான் இறைச்சி எப்படிக் கிடைத்தது?” என்பது குறித்துப் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT