இந்திய அமெரிக்க வர்த்தக சபைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!
மும்பையிலிருந்து செயல்பட்டு வரும் இந்திய அமெரிக்க வர்த்தக சபைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாஇந்திய அமெரிக்க வர்த்தக சபைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!
மும்பையிலிருந்து செயல்பட்டு வரும் இந்திய அமெரிக்க வர்த்தக சபைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: மும்பையிலிருந்து செயல்பட்டு வரும் இந்திய அமெரிக்க வர்த்தக சபைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்திய அமெரிக்க வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது. இது ஒன்றே இரு தரப்பு வர்த்தக அமைப்புகளும் இணைந்து செயல்படும் ஒரே அமைப்பாக உள்ளது.
இந்நிலையில் 2016-17-ஆம் ஆண்டுக்கான இந்த சபையின் நிர்வாகிகள் தற்போது தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பபின் சென்னை அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய அமெரிக்க வர்த்தக சபைக்கான 2016-17 ஆம் ஆண்டுக்கான தேசிய தலைவராக என்.வி.ஸ்ரீனிவாசன் அவர்களும், துணை செயல் தலைவர்களாக வசந்த் சுப்ரமண்யன் மற்றும் டாக்டர்.லலித் பசின் ஆகிய இருவரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது நியமனம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இந்திய அமெரிக்க வர்த்தக சபையின் கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவர்களில் என்.வி.ஸ்ரீனிவாசன் புகழ்பெற்ற சட்ட ஆலோசகராவர். வசந்த் சுப்ரமண்யன் புகழ்பெற்ற தொழில் ஆலோசகராகவும், டாக்டர்.லலித் பசின் இந்திய பார் அசோஸியேஷனின் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.