முகப்பு
இந்தியா

'பிளாக்பக்' மான் வேட்டை: பிரபல இந்தி நடிகருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு!

அரிய வகை 'பிளாக்பக்' மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல இந்திநடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Updated On : 19 அக்டோபர், 2016 at 6:19 PM
பகிர்:

ஜோத்பூர்: அரிய வகை 'பிளாக்பக்' மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல இந்திநடிகர் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக, ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றிருந்தார். அப்பொழுது அங்கே காட்டுப்பகுதிகளில் உள்ள ஆபூர்வ வகை 'பிளாக்பக்' வகை மான்களை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் போடப்படட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த விசாரணை நீதிமன்றம் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து சல்மான் கான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 13 நாள்கள் மட்டும் சிறையில் இருந்த அவர், பின்னர் பிணையில் விடுவிக்கபட்டார்.

Advertisement

இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை  எதிர்த்து சல்மான் கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி சல்மான் கான் மீதான தண்டனையை கடந்த ஜூலையில் ரத்து செய்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.