முகப்பு
இந்தியா

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இளம்பெண் கொலை: டெல்லி அருகே பரிதாபம்!

டெல்லி அருகே குர்கானில் உள்ள எம்.ஜி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் இன்று காலை குத்திக் கொல்லப்பட்டார்.

Updated On : 24 அக்டோபர், 2016 at 7:17 PM
பகிர்:

குர்கான்: டெல்லி அருகே குர்கானில் உள்ள எம்.ஜி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் இன்று காலை குத்திக் கொல்லப்பட்டார்.

இது பற்றிய விபரம் வருமாறு:

எம்.ஜி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை பிங்கி (22) என்ற இளம்பெண் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஜிஜேந்திரா (25) என்ற வாலிபர், எதிர்பாராத ஒரு தருணத்தில் பிங்கியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.

Advertisement

அதிர்ச்சியில் உறைந்த  அங்கு இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள், உடனடியாக அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஜிஜேந்திராவை உடனடியாக பிடித்து குர்கான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அதே சமயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிங்கி, சிகிசிச்சை  பலன் இன்றி உயிர் இழந்தார்.

காவல்துறையினர் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து, ஜிதேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.