இந்தியா

கவர்னருடன் உ.பி முதல்வர்  அகிலேஷ் யாதவ் 'திடீர்' சந்திப்பு!

DIN

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அம்மாநில முதல்வர்  அகிலேஷ் யாதவ், ஆளுநர் ராம் நாயக்கை இன்று  திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி  கட்சிக்குள்  உட்கட்சி குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பூசலானது கட்சியே பிளவுபடும் சூழலை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் முதல்வர் அகிலேஷ் யாதவ் மாநில ஆளுநர் ராம் நாயக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அகிலேஷ் யாதவின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஆச்சர்ய அலைகளை கிளப்பிய நேரத்தில், இந்த சந்திப்புக்கு முன்பே நேரம் கேட்கப்பட்டு இருந்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து கவர்னரிடம் அகிலேஷ் யாதவ் விளக்கியதாக ஆளுநர் மாளிகை வட்டாரத்திலிருந்துவெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT