முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தேடுதல் வேட்டை: காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் கைது!

ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் காவல்துறை அதிகாரி ஒருவர்  உள்பட 6 சந்தேகத்திற்கிடமான நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Updated On : 28 அக்டோபர், 2016 at 4:10 PM
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் காவல்துறை அதிகாரி ஒருவர்  உள்பட 6 சந்தேகத்திற்கிடமான நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாடாமாலோ காவல் நிலைய எல்லைக்கு  உட்பட்ட பகுதியில் தேடுதல்  வேட்டையை பாதுகாப்பு படையினர் துவக்கினர். அப்போது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 நபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்தனர்.

அவர்களிடம் கிடைத்த தகவலை அடுத்து தீவிரவாதிகளுக்கு உதவியதாக குப்வாரா மாவட்டம் கார்நாக்கை சேர்ந்த காவல்துறை அதிகாரி  ஒருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்து உள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.