வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை: கட்டுப்பாடுகளுடன் தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி!
பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்த, கடுமையான கட்டுப்பாடுகளுடன் தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்சப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை செயல்படுத்த, கடுமையான கட்டுப்பாடுகளுடன் தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்சப் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அன்று தனது தனியுரிமைக் கொள்கைகளில் மாற்றம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளிட்டது. அதன்படி தனது பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள் , தனது உரிமையாள நிறுவனமான முகநூலுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தில்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்க்ரா இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
புதிய கொள்கை நடைமுறைக்கு வந்திருக்கும் செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு முன்பு வரை சேகரிக்கப்பட்ட பயனாளர்களின் தகவல்கள் அத்தனையும், முகநூல் உள்ளிட்ட எந்த ஒரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ளப்படக் கூடாது.
அதே போல் புதிய கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, வாட்சப் சேவையை விட்டு விலகும் பயனாளர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் அழிக்கபட வேண்டும்.
வாட்சப் சேவையை விட்டு விலகியவர்களின் தகவல்கள் உடனே அழிக்கப்பட்டு விடும் என்ற அந்நிறுவனத்தின் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு, அது தவறான தகவல் என்று வாதி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, வாட்சப் பயன்படுத்த விருப்பம் தெரிவித்து, அதனை விட்டு விலகாமல் பயன்படுத்தி வருபவர்கள் தொடர்பான விபரங்களும் கூட உடனே அழிக்கப்பட்டு விட வேண்டும்
இவ்வாறு அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.