இந்தியா

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியின் கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க முடிவு

DIN

மும்பையில் 1993-ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹனீப் கதாவாலாவின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க இருக்கிறது.
ஹனீப்தான் நடிகர் சஞ்சய் தத்துக்கு துப்பாக்கியை வழங்கினார். அவரது கொலை வழக்கில் மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசின் பரிந்துரைக்கு ஏற்ப ஹனீப் கொலை வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது கொலை வழக்கில் சோட்டா ராஜன், அவரது கும்பலைச் சேர்ந்து குரு சாத்தம் உள்ளிட்டோர் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது.
மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தேவையான வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை குஜராத் கடற்கரைப் பகுதியில் இருந்து ஹனீப் தலைமையிலான குழுவினர், மும்பையில் உள்ள சஞ்சய் தத் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். டைகர் மேமனின் உத்தரப்படி இந்த வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக 1993-ஆம் ஆண்டில் மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஹனீப் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் வெளியேவந்தார்.
2001-ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் 3 பேர் அவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர். சோட்டா ராஜனின் தூண்டுதலின்பேரில்தான் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தோனேசிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன், பின்னர் இந்தியா கொண்டு வரப்பட்டார். இப்போது சிறையில் உள்ள அவர் மீது மகாராஷ்டிரத்தில் மட்டும் 70 வழக்குகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT