முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி மீது ஷூ வீச்சு!

உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது ஷூ  வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:39 AM
பகிர்:

உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது ஷூ  வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

விரைவில் தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகள் ,மாணவர்கள் உள்ளிட்ட பலவேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடும் வகையில் அவரது பயணம் அமைந்துள்ளது.

அந்த வகையில் சித்தாபூர் மாவட்டத்தில் அவர் இன்று  தனது பயணத்தை மேற்கொண்டிருந்த அவரை நோக்கி கூட்டத்திலிருந்து ஷூ வீசப்பட்டது. அவரது தலைக்கு வெகு நெருக்கமாக அந்த ஷூ பறந்து சென்றது.ஷூ வீசியவர் உடனடியாக கைதுசெய்யப்பட்டார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக அங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →