உரி தாக்குதலுக்கு பதிலடி: பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்
உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லையில் பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
புது தில்லி: உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லையில் பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி ஜெனரல் ரன்பீர் சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாதிகளை அனுமதிக்கக் ககூடாது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் வலியுறுத்தலை பாகிஸ்தான் புறக்கணித்து வருகிறது.
Advertisement
இந்திய எல்லைக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று அதிரடி தாக்குதலை நடத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.