முகப்பு
இந்தியா

பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி: குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலம்

2016ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:17 PM
பகிர்:

புது தில்லி: 2016ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திரைப்பட பின்னணிப் பாடகர் யேசுதாஸ், ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி, பிரணாப் முகர்ஜி கௌரவித்தார்.
 

துக்ளக் இதழ் ஆசிரியர் மறைந்த சோ சார்பில் அவரது மனைவி பத்ம பூஷண் விருதினை வழங்கினார்.

ஒலிம்பிக் வீரர்களான மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்  உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் பிரணாப் முகர்ஜி வழங்கிப் பாராட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →