இந்தியா

ஸ்ரீநகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை தொடங்கியது: பரூக் அப்துல்லா தொடர்ந்து முன்னிலை

DIN

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் மக்களவை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பரூக் அப்துல்லா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  
ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது.
அதன் வாக்குப்பதிவின்போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும், அதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக 7.14 சதவீதம் வாக்குகளே பதிவாகின.
இந்தச் சூழலில், தேர்தல் வன்முறை காரணமாக ஸ்ரீநகரில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து, வியாழக்கிழமை மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
சோய்பாக் என்னும் பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி அருகே நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தைத் தவிர, வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.
எனினும், இந்த வாக்குப் பதிவில் வெறும் 2 சதவீத வாக்குகளே பதிவானது.
இந்நிலையில், ஸ்ரீநகர் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று சனிக்கிழமை (ஏப். 15) காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதில், ஜம்மு-காஷ்மீா் மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா 986 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை இருந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT