முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர் தாக்குதலில் பலியான 4 தமிழக வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி ...

Updated On : 25 ஏப்ரல், 2017 at 1:08 PM
பகிர்:

சென்னை: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில்  நேற்று மாலை மாவோயிச பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மத்திய சிறப்புக் காவல்படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.

மரணமடைந்த 25 பேரில் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன், தஞ்சாவூர் மாவட்டம் நல்லூரை சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் மதுரை மாவட்டம் பெரியப்பூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகிய நால்வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Advertisement

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான நான்கு தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.