எல்லையில் மதத்தை தாண்டி மலர்ந்த சகோதரத்துவம்: இதுதான் இந்திய அடையாளம்!
இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் சிஆர்பிஎஃப் வீரர் தொழுகையில் ஈடுபடுவதும், அவருக்கு ஆயுதம் தாங்கிய சக வீரர் பாதுகாப்பு அளிக்கும் புகைப்படம் டிவிட்டரில் அதிக நபரால் பகிரப்பட்டு வருகிறது.
ஜம்மு: இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் சிஆர்பிஎஃப் வீரர் தொழுகையில் ஈடுபடுவதும், அவருக்கு ஆயுதம் தாங்கிய சக வீரர் பாதுகாப்பு அளிக்கும் புகைப்படம் டிவிட்டரில் அதிக நபரால் பகிரப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் நகரின் சாலையோரம் முஸ்லிம் சிஆர்பிஎஃப் வீரர் தொழுகையில் ஈடுபடுகிறார். அவருக்கு அருகே, ஆயுதம் தங்கிய மற்றொரு வீரர் பாதுகாப்பு அளிக்கும் புகைப்படத்தை அப்பகுதியைச் சேர்ந்த நபரால் எடுக்கப்பட்டு சமூக தளத்தில் பதிவிடப்பட்டது.
இந்தியாவின் அடையாளம், சகோதரத்துவம் என்ற பெயர்களில் இந்த புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இவர்கள் இருவரும் சிஆர்பிஎஃப்பின் 118வது பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்றும், இவ்விரண்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் தங்களது இருக்கும் எல்லைக்குள், ஜாதி, மதம் கடந்து உதவி செய்து கொள்கிறார்கள் என்று சிஆர்பிஎஃப் அதிகாரி ரவிதப் சாஹி கூறினார்.
நட்புக்கு அடையாளமாக விளங்கும் இந்த புகைப்படத்தை மிக முக்கிய பிரமுகர்கள் முதல், சாமானிய மக்கள் வரை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். இதுதான் இந்தியாவின் அடையாளம், இவர்கள்தான் இந்தியர்கள் என்றும், மதக் கலவரங்கள் அந்நிய சக்திகளால் உண்டாக்கப்படும் பயங்கரவாதம் என்றும் இந்த புகைப்படம் குறித்து கருத்துக்களும் பகிரப்பட்டு வருகிறது.