முகப்பு
இந்தியா

சமூக வலைதளங்களில் பரவிய ஆபாச புகைப்படங்கள்: பறிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பதவி!

இளம்பெண்களுடன் இருப்பது போன்ற அந்தரங்கப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதன்  காரணமாக, ஜம்மு காஷ்மீரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டது.

Updated On : 4 ஆகஸ்ட், 2017 at 6:49 PM
பகிர்:

ஜம்மு: இளம்பெண்களுடன் இருப்பது போன்ற அந்தரங்கப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதன்  காரணமாக, ஜம்மு காஷ்மீரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் பதவி பறிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் துணை ஆணையராக இருப்பவர் நீரஜ் குமார். விடுதி அறை ஒன்றில் இளம்பெண்கள் சிலருடன் இவர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வளைதளங்களான வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் பரவின. இதனைத் தொடர்ந்து அவர் மீது பொது மக்களிடையே பரவலான எதிர்ப்பு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து மாநில அரசு உடனடியாக செயல்பட்டு நீரஜ் குமாரைப் பதவி நீக்கம் செய்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் பொழுது, குறிப்பிட்ட புகைப்படங்களைப் பார்தவுடன்  நாங்கள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பிட்ட படங்கள் நிஜமானதா அல்லது தயாரிக்கப்பட்டதா என்பது எங்களுக்கு தெரியாது. உண்மைத் தன்மையினை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டள்ளது' என்று தெரிவித்தார்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.