இந்தியா

தில்லியில் இரண்டு விமானங்கள் மோதல்: 196 பயணிகள் பத்திரமாக மீட்பு

DIN

தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அதற்காக அனுமதிக்கப்பட்ட பே-86 என்ற தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகிலேயே பே-87 தடத்தில் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானமும் நின்றிருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை மதியம் 2.20 மணியளவில் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாரானது. அப்போது அந்த விமானத்தை நகர்த்தும் போது அதன் அருகிலிருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது மோதியது.

அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானங்களின் இறகுகள் மட்டும் ஒன்றோடு ஒன்று மோதியது. மற்றபடி பெரிய அளவில் விபத்து எதுவும் ஏற்படவில்லை. இந்த இரண்டு விமானங்களின் என்ஜின்களும் அருகில் இருந்த நிலையில், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர் டிராக்டர் மூலம் இரண்டு விமானங்களும் பிரிக்கப்பட்டு எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 196 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விமான நிலையத்திலேயே இதுபோன்று அதிர்ச்சிகர விபத்து நடத்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT