இந்தியா

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய தம்பிதுரை: எம்பிக்கள் எதிர்ப்பால் எழுந்த சர்ச்சை! 

DIN

புதுதில்லி: நாடாளுமன்ற நிகழ்வு ஒன்றில் துணை சபாநாயகரும் அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை தமிழில் பேசியதற்கு,  மற்ற எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா இருந்த பொழுது, அவர்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் 1942-ஆம் ஆண்டு நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் மிகவும் முக்கியமானது. அந்த போராட்டத்தின் 75-ஆவது ஆண்டு விழா நாடாளுமன்றத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை உரையாற்றத் துவங்கினார். அவர் தனது உரையினைத் தமிழில் துவங்கியதால், அதற்கு மற்ற எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அவர் தனது உரையினை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தமிழில் பேசியதற்கு, மற்ற எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்ததால்  சர்ச்சை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT