இந்தியா

இன்று சரத் யாதவ் தலைமையில் பொதுக்கூட்டம்: மன்மோகன், ராகுல் பங்கேற்பு

DIN

ஐக்கிய ஜனதா தள அதிருப்தி தலைவர் சரத் யாதவ் தலைமையில் வியாழக்கிழமை (ஆக.17) நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
பிகாரில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவற்றுடனான மகா கூட்டணியிலிருந்து விலகிய நிதீஷ் குமார், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக பொறுப்பேற்றார்.
லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாகவே, மகா கூட்டணியிலிருந்து நிதீஷ் குமார் விலகியதாகக் கூறப்பட்டது.
எனினும், பாஜகவுடனான இந்தப் புதிய கூட்டணியை நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ் ஏற்கவில்லை. மேலும், இந்தக் கூட்டணிக்கு எதிராக பிகார் மக்களிடையே அவர் தொடர் பிரசாரங்களையும் மேற்கொண்டு வந்தார்.
இதன் காரணமாக, ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சரத் யாதவ் கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிரடியாக நீக்கப்பட்டார்.
மேலும், அவரது ஆதரவாளர்கள் சிலரும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிகாரில் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு சரத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்தப் பொதுக் கூட்டமானது, நாட்டின் பன்முகக் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் சரத் யாதவின் ஆதரவாளர்கள் மட்டுமன்றி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று சரத் யாதவ் தெரிவித்தார்.
குறிப்பாக, காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT