இந்தியா

குடியரசுத் தலைவர் இன்று லே பயணம்

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே நகருக்கு திங்கள்கிழமை பயணம் மேற்கொள்கிறார்.
குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு தில்லிக்கு வெளியே அவர் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலிகா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
லே நகரில் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், ராணுவத்தின் லடாக் ஸ்கவுட் படைப்பிரிவு உள்ளிட்ட 6 படைப் பிரிவினருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கி கெüரவிக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி விபின் ராவத் உள்பட ராணுவ அதிகாரிகள் பலர் பங்கேற்கிறார் என்றார்.
லடாக்கில் ராணுவ தளபதி ஆய்வு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்ட ராணுவ தளபதி விபின் ராவத், அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
லடாக்கில் உள்ள எல்லையில்தான் கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தபோது, நமது ராணுவ வீரர்கள் மனிதச் சங்கிலி அமைத்து அவர்களைத் தடுத்தனர். இதையடுத்து, சீன வீரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இந்த வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ராணுவத் தளபதி, லடாக் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சீனாவுடனான எல்லைப் பகுதிக்குச் சென்று அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்துவார் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT