இந்தியா

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி: பிரதமர் நரேந்திர மோடி

இரு மாநிலங்களிலும் பாஜக-வின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி, திங்கள்கிழமை தெரிவித்தார்.

Raghavendran

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. 

இதையடுத்து, பாஜக-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். குஜராத்தைப் பொறுத்தவரையில் 6-ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கப்போகிறது. மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதன்மூலம் நாடு முழுவதிலும் பாஜக 19 மாநிலங்களில் ஆளும் கட்சியாக உயர்ந்தது. இதில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 4-ஆக குறைந்தது.

இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்பதை உறுதிபடுத்தியது. பாஜக-வுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இனிவரும் காலங்களிலும் வளர்ச்சியை நோக்கிய பயணம் தொடரும். மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் நல்லாட்சி தொடர்ந்து நடைபெறும்.

இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றிக்காக அயராது உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் இந்த கடின உழைப்புதான் இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தது.

இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் 84,575 பக்தா்கள் தரிசனம்

வெளிமாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக்கூடாது

நெடுஞ்சாலைத் துறையில் 10,000 காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்!

சம்பட்டிமடை கிராமத்துக்கு சாலை அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

SCROLL FOR NEXT