ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி: ரூ.40 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு நகை விற்பனை நிறுவனத்தின் பல்வேறு கடைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
இந்தியாரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி: ரூ.40 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு நகை விற்பனை நிறுவனத்தின் பல்வேறு கடைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஒரு நகை விற்பனை நிறுவனத்தின் பல்வேறு கடைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அதில், ரூ.40 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வைரம் மற்றும் மாணிக்கக் கற்கள் ஆகியவ கைப்பற்றப்பட்டன.
முன்னதாக, அத்ரிஜா தங்க நிறுவனம் என்ற அந்த தனியார் நிறுவனத்தின் தலைவர் கெளதம் குந்து மீது ரோஸ் வேல் நிதி நிறுவன மோசடி தொடர்பாக கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கெளதம் உள்ளிட்டோர் கடந்த 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அத்ரிஜா தங்க நிறுவனம் மீது கொல்கத்தா மற்றும் புவனேசுவரத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
அந்த நிறுவனம் சார்பில் மொத்தம் 27 சீட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அவற்றில் சுமார் 12 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. அவற்றில் 8 முதல் 27 சதவீதம் வரை வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து பணத்தை மோசடி செய்துள்ளனர். மொத்தம் ரூ.15,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.