முகப்பு
இந்தியா

காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு 'பளார்' விட்ட கான்ஸ்டபிள்!

தன்னை அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ-வை காவலுக்கு இருந்த கான்ஸ்டபிள் திருப்பி அறைந்தார். இச்சம்பவம் காரணமாக அங்கு சில நேரம் சலசலப்பு நிலவியது.

Updated On : 29 டிசம்பர், 2017 at 4:17 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:58 PM

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து அங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. 

இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தோல்வி குறித்து புதிதாகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். இதனால் பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

அப்போது வெளியில் காவலுக்கு நின்றிருந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஆஷா குமாரிக்கும் இடையே கடுமையாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது யாரும் எதிர்பாரா விதமாக அந்த பெண் கான்ஸ்டபிளை காங்கிரஸ் எம்எல்ஏ திடீரென கன்னத்தில் அறைந்தார். உடனடியாக அந்த கான்ஸ்டபிளும் காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு திருப்பி ஒரு அறை விட்டார். இச்சம்பவம் காரணமாக அங்கு சில நேரம் சலசலப்பு நிலவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காங்கிரஸ் எம்எல்ஏ பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவங்களை அடுத்து அந்த காங்கிரஸ் எம்எல்ஏ கூறியதாவது:

எங்கள் இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறில் அவர் என்னை தள்ளி விட்டார். நான் அவர் தாயாரின் வயதுடையவர் என்ற எண்ணம் கூட அவரிடம் இல்லை. அப்போது எதிர்பாரா விதமாக நான் கோபமடைந்து அந்த காவலரை அறைந்து விட்டேன். அதற்காக தற்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.