இந்தியா

உள்ளாட்சி தேர்தல் காரணமாக வன்முறை: நாகலாந்தில் அரசு அலுவலகங்கள், வாகனங்களுக்கு தீ வைப்பு! 

நாட்டின் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வன்முறைகளால் அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பு ...

DIN

கொகிமா: நாட்டின் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வன்முறைகளால் அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

விரைவில்நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக நாகலாந்து மாநிலத்தில் இன்று வன்முறை வெடித்தது. தலைநகர் கொகிமா முழுவதும் வன்முறை பரவி உள்ளது.

சட்டசபையை நோக்கி  ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். அந்த சமயத்தில் நாகாலாந்து மாநில முதல்வர் டி.ஆர். ஜீலியாங், மற்றும் பிற மந்திரிகள் சட்டசபையில் இருந்தனர். போராட்டக்காரர்கள் செல்லும் வழியில் இருந்த அரசு அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர் . நிறைய அரசு அலுவலகங்கள்  சேதப்படுத்தப்பட்டுள்ளன .

புதிய தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியில் தற்போது மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது.

முன்னதாக நேற்று இரவு போலீஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இருவர் உயிரிழந்தனர், 10 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மாநிலத்தின் வர்த்தக தலைநகர் திமாபூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாநிலம் முழுவதும் மொபைல் இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான , கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக ஆட்சியில் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: அமித் ஷா

தமிழ் அடையாளத்திற்கு முன்பு வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி

சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

நியூசிலாந்து பேட்டிங்: 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணி!

பல்கலை. தரவரிசையில் முதல் 500 இடங்களில் இந்தியா இல்லை: பிரதமர் மீது குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT