முகப்பு
இந்தியா

மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநரே முடிவு செய்வார் - ராஜ்நாத் சிங்  

தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநரே முடிவு செய்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On : 10 பிப்ரவரி, 2017 at 11:44 AM
பகிர்:

புதுதில்லி: தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநரே முடிவு செய்வார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலவம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலவர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக  பொதுச்செயலாளர் சசிகலா இருவரும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோரியதாவது:

Advertisement

மாநில அரசியல் செயல்பட்டிற்கு ஆளுநரே தலைவர் ஆவார். தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆளுநர் இறுதி முடிவு எடுப்பார். மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து ஆளுநரே முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.