இந்தியா

ஐநூறு கிலோ எடை கொண்ட எகிப்து பெண்ணுக்கு மும்பையில் எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை!

DIN

மும்பை: ஐநூறு கிலோ எடை கொண்ட உலகின் மிகவும் பருமனான எகிப்து பெண்ணுக்கு மும்பையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

எகிப்தை சேர்ந்தவர் இமான் அகமது (36). இவர் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வருகிறார். 500 கிலோவுக்கும் அதிகமாக அவரது உடல் எடை உள்ளது. இதன் காரணமாக அவர் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறவில்லை. அதே போல் 13 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்து வருகிறார்.

இதனால் கடுமையாக அவதிப்பட்டு வந்த இமான் மும்பையில் உள்ள உடல் எடைக் குறைப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் முபாஸல் லக்டாவா லாவை தொடர்பு கொண்டர். தன்னுடைய பிரச்சினைக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் டாக்டர் லக்டாவாலா தனது மருத்துவக் குழுவை கடந்த டிசம்பரில் எகிப்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு மருத்துவக்குழுவினர் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். அதிக உடல் எடையுடன் நீர்ச்சத்து குறைபாடு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் தொற்று ஆகிய நோய்களாலும் இமான் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே இமானுக்கு உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், இமானை மும்பைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்க அனுமதிக்கும்படி லக்டாவாலா மனு அளித்தார்.

அந்த மனுவை பரிசீலித்த சுஷ்மா ஸ்வராஜ் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எகிப்தில் இருந்து இமான் அகமது நேற்று தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து அவர் தனியான ட்ராக் ஒன்றின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் அவருக்கு என்று வடிவமைக்கப்பட்ட தனி அறையில் அவர் கிரேன் மூலம் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT