இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய முன்னாள் நீதிபதி!

IANS

புதுதில்லி: நீதிபதிகள்  நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியதற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.    

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சமூகவலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலிஜியம் நடைமுறை தொடர்பாக சர்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் பகிந்திருந்தார்.

இதனால் அதிருப்தியடைந்த உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்துஅவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில்  இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது கட்ஜு சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜீவ் தவான் மன்னிப்பு கடிதத்தை தாக்கல் செய்தார்.

அதில் நீதிபதிகள் நியமன நடைமுறை மற்றும் ஒரு நீதி பரிபாலன அமைப்பாக உச்ச நீதிமன்றம் மீதும்  மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கட்ஜு தெரிவித்தார். மேலும் தான் தெரிவித்த கருத்துக்களுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும்,குறிப்பிட்ட பதிவை நீக்கி விட்டதாவும் தெரிவித்துள்ளார்.

கட்ஜுவின் மன்னிப்பே ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் யூ.யூ.லலித் ஆகிய இருவரும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

SCROLL FOR NEXT