முகப்பு
இந்தியா

காந்தி உருவம் பொறித்த காலணிகள்: மீண்டும் இந்தியாவை சீண்டும் அமேசான் இணையதளம்! 

இணையவழி பொருட்கள் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள்... 

Updated On : 15 ஜனவரி, 2017 at 9:53 AM
பகிர்:

புதுதில்லி: இணையவழி பொருட்கள் விற்பனை தளமான அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அமேசான் நிறுவனம் இணையவழியாக பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் இணைய தளங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இணையதளத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட  காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அமேசானுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தங்களது கண்டனத்தை பதிவிட்டு உள்ளனர். பிரபல சமூக வலைதளமான  டிவிட்டரில் இந்திய பயனாளர்கள் இந்த விவகாரத்தை பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரின் டிவிட்டர் கணக்குகளுக்கு 'டேக்' செய்து தெரியபடுத்தி உள்ளனர்.

Advertisement

சர்ச்சைக்குரிய இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இருந்து நேரடியான கருத்து எதுவும் வெளியாகவில்லை.

கடந்த வாரம் இந்திய தேசிய கொடி உருவம் பாதிக்கப்பட்ட மிதியடிகள் அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டதும், சுஷ்மா ஸ்வராஜின் கடும் கண்டனத்திற்குப் பிறகு விளக்கி கொள்ளபட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.