முகப்பு
இந்தியா

மாற்றத்தை ஏற்படுத்த தைரியம் அவசியம்

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு தைரியம் மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியா

மாற்றத்தை ஏற்படுத்த தைரியம் அவசியம்

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு தைரியம் மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு தைரியம் மிகவும் அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 2015-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளிடையே மோடி பேசியதாவது:
இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பல நாடுகள், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. வளர்ச்சிப் பாதையில் பல்வேறு தடைகள் இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அந்த நாடுகள் முன்னேறியுள்ளன.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு தைரியமும், துணிவும் மிகவும் அவசியம். இளம் அரசு அதிகாரியான நீங்கள் புதிய மாற்றத்தை ஏற்கும் மனத் துணிவுடன் செயல்பட வேண்டும்.
இந்திய அரசு நிர்வாகம் துடிப்புடன் செயல்பட்டு புதிய இந்தியா உருவாக உங்கள் பங்களிப்பு மிகவும் அவசியம். அரசு நிர்வாகத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.
இளம் அதிகாரிகளான நீங்கள் உங்களுடைய மூத்த உயரதிகாரிகளுடன் திறந்த மனதுடன் கலந்துரையாட வேண்டும். அப்போதுதான் அரசு நிர்வாகத்தில் புதுமையான உத்திகளைக் கையாள முடியும். நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்கு அதிகபட்ச நன்மை அளிக்கும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியாவதற்காக நீங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருப்பீர்கள். அதில் உங்களுக்கு வெற்றி கிடைத்துவிட்டது. எனவே உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →