இந்தியா

உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பழங்கால வைரங்கள் திருட்டு!

DIN

புதுதில்லி: உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில், சிலை ஒன்றின் நெற்றியில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற பழங்கால வைரங்கள் திருட்டுப் போயுள்ளதாக உச்சநீதிமன்றத்தல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது பத்மநாபசுவாமி கோயில். உலகின் பணக்கார இந்துக்  கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோவிலில் ரகசிய அறைகளில் குவிந்திருக்கும் தங்க, வைர மற்றும் பல்வேறு விதமான வளங்களின் மொத்த மதிப்பு இன்று வரை கணக்கிடப்படவில்லை.  இருந்த போதிலும், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2010-ஆம் ஆண்டு ஒரு நிலவறையினைத் திறந்து நடத்தப்பட்ட சோதனையின் படி, கோயில் பொக்கிஷங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.

முன்னதாக இத்தனை மதிப்புமிக்க சொத்துக்களையுடைய இந்த் கோவில் சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்று 2009-ஆம் ஆண்டு கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை, இந்த வழக்கில் தனக்கு உதவுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.அதன்படியே 2010-இல் சோதனை நடத்தப்பட்டது. 

பின்னர் கடந்த வருடம் அப்பொழுதைய மத்திய தலைமைக் கணக்காளர் வினோத் ராயின் சோதனையின் பொழுது, ரூ.189 கோடி மதிப்புடைய   தங்கத்தினை காணவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்பொழுது அங்குள்ள சிலையொன்றின் முன் நெற்றியில் உள்ள 'நாமத்தில்' பொருத்தப்பட்டிருந்த பழம்பெரும் வைரங்கள் எட்டினைக்  காணவில்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படை மதிப்பாக ரூ.21 லட்சம் என்று கூறப்பட்டாலும், அதன் பழங்காலத்து தன்மை காரணமாக விலைமதிக்க முடியாதது என்று கூறப்படுகிறது.

இந்த திருட்டு குறித்து கேரள காவல்துறையின் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்த தகவலை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு நாளை (செவ்வாய்க்கு கிழமை) விசாரணைக்கு வருகிறது      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT