இந்தியா

இஸ்ரேல் - இந்தியா உறவு ஆபத்தானது

DIN

இஸ்ரேல் - இந்தியா இடையே ஏற்பட்டுள்ள புதிய உறவு மிகவும் ஆபத்தானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், பினராயி விஜயன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது, பாலஸ்தீனம் நாட்டுடனான நட்புறவுக்குதான் காலகாலமாக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால், தற்போது பாலஸ்தீனத்துக்கு எதிரி நாடான இஸ்ரேலுடன் இந்தியா கைகோத்திருப்பது வியப்பளிக்கிறது.
இஸ்ரேலின் உச்சகட்ட நோக்கமானது, ஒரு முழு யூத நாட்டை உருவாக்குவது மட்டுமல்ல. பாலஸ்தீனத்தை அடியோடு அழிப்பதாகும். அப்படியிருக்கும்போது, இஸ்ரேலுடன் கூட்டணி அமைத்து பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர்க்கப் போகிறது என்பது புரியவில்லை.
பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறையை இந்தியா எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறது. தற்போது அந்தக் கொள்கையை மோடி முற்றிலும் தலைகீழாக மாற்றிவிட்டார். இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இப்போது உருவாகியுள்ளது. இதன் மூலம் பெறப்படும் நிதியை, பாலஸ்தீனத்துக்கு எதிராகவே இஸ்ரேல் பயன்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
புதிதாக உருவாகியுள்ள அமெரிக்க - இந்திய - இஸ்ரேல் கூட்டணி மிகவும் ஆபத்து நிறைந்ததாகும். பாஜக அரசின் அனைத்துக் கொள்கைகளும் அதன் வெறுப்பு அரசியலையே பிரதிபலிக்கிறது என அந்தப் பதிவில் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT