முகப்பு
இந்தியா

ஆதார் தொடர்புடைய விவகாரங்களை அரசியல்சாசன அமர்வு முடிவு செய்யும்: உச்ச நீதிமன்றம்

ஆதார் திட்டம் தொடர்புடைய அனைத்து விவகாரங்களிலும் அரசியல்சாசன அமர்வு இறுதி முடிவெடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா

ஆதார் தொடர்புடைய விவகாரங்களை அரசியல்சாசன அமர்வு முடிவு செய்யும்: உச்ச நீதிமன்றம்

ஆதார் திட்டம் தொடர்புடைய அனைத்து விவகாரங்களிலும் அரசியல்சாசன அமர்வு இறுதி முடிவெடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:22 PM
பகிர்:

ஆதார் திட்டம் தொடர்புடைய அனைத்து விவகாரங்களிலும் அரசியல்சாசன அமர்வு இறுதி முடிவெடுக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், 'மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற நிலை தோன்றியுள்ளது. ஆதார் அட்டை பெறாதவர்கள் இத்திட்டங்களின் பயன்களைப் பெற முடியாமல் போய்விடலாம். எனவே, அரசின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27- ஆம் தேதி நடைபெற்றது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில், 'ஆதார் எண் இல்லை என்பதால் யாரும் சமூக நிலத் திட்டங்களின் பயன்களை இழக்க மாட்டார்கள். இது குறித்து அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. ஆதார் இல்லாதவர்கள் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் அடிப்படையில் பயன்பெறலாம்' என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற அரசின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். 'ஆதார் எண் இல்லாதவர்கள் சமூக நலத் திட்டங்களின் பயன்களை இழப்பார்கள் என்ற மனுதாரர்களின் அச்சத்தின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ஏ.எம்.கான்வில்கர், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், 'ஆதார் திட்டம் தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் அரசியல்சாசன அமர்வு முடிவு செய்யும். எனவே அந்த அமர்வை அமைக்குமாறு நீங்கள் (மனுதாரர்கள், அரசுத் தரப்பு) தலைமை நீதிபதியைக் கோர வேண்டும்' என்று குறிப்பிட்டனர்.
அதன்படி, இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியிடம் குறிப்பிடுவதாகவும், ஆதார் தொடர்புடைய விவகாரங்களை விசாரித்து முடிவெடுப்பதற்காக அரசியல்சாசன அமர்வை அமைக்குமாறு அவரைக் கோருவோம் என்றும் அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும், மனுதாரர்கள் தரப்பின் மூத்த வழக்குரைஞரான ஷியாம் திவானும் தெரிவித்தனர்.

சர்வாதிகார நாடு என்பதா? அரசு வழக்குரைஞர் ஆட்சேபம்
ஆதாரை எதிர்க்கும் மனுக்கள் மீதான வாதம் நீதிபதி செலமேஸ்வர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் வாதிட்டார். அவர் கூறியதாவது:
மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்பது பிறப்பு முதலே குடிமக்களின் தனியுரிமை மீதான தாக்குதலாகும். ஏனெனில் குழந்தைகள் கூட தங்களின் கை விரல் ரேகை போன்றவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
தங்களின் கைவிரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் விவரங்களை அளிக்குமாறு குடிமக்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது. ஏனெனில், குடிமக்களை அவர்களின் பிறப்பில் இருந்தே முழுமையாகக் கட்டுப்படுத்த அரசுக்கு இது வாய்ப்பளித்து விடும். இதற்கு இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறி வருகிறது என்று அர்த்தம். மேலும், நம் நாடு சித்திரவதை முகாமாக மாறிவிடும் என்று ஷியாம் திவான் வாதிட்டார்.
அவரது இந்த வாதத்துக்கு அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில் 'மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர் ஆதார் திட்டம் குறித்து அறிந்திருக்கவில்லை. இத்திட்டத்தின் வாயிலாக, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் சமூக நலத் திட்டங்களின் பயனாளிகளாகவுள்ளனர்' என்று குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →