இந்தியா

சிறப்பாக செயல்படாத அரசு அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு: யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி

DIN

லக்னோ: உத்தரபிரதேச அரசு நிர்வாகத்தில் சரிவர பணியாற்றாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கும் அறிவிப்பை உத்தரபிரதேச புதிய தலைமைச்செயலாளர் ராஜிவ்குமார் வெளியிட்டுள்ளார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது அரசு அலுவலகங்களை பார்வையிட்டு பணிகளை சரிவர செய்யாத அதிகாரிகளுக்கு அவ்விடத்திலேயே உரிய தண்டனையும் அளித்து வருகிறார்.

அந்தவகையில், இந்த மாதம் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளனர். அந்த ஆய்வில் சரிவர செயல்படாத அதிகாரிகளின் பட்டியலில், 50 வயது மற்றும் அதை கடந்தவராக இருப்பின் அவர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான அறிவிக்கைக்கு அவரது பெயர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

"இதுபோன்ற அதிரடி உத்தரவு, அரசு இயந்திரங்களை உயர்த்துவதற்கு மட்டுமல்லாமல், அவை துருப்பிடிக்காமலும், முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டங்களை வழங்குவதற்கு உதவும்" என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சுத்தமான மற்றும் திறமையான நிர்வாகத்தின் வாக்குறுதியால் பாஜக ஆட்சிக்கு வந்தது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுநலனை கருத்தில் கொண்டு சில துறைச்சார்ந்த அதிகாரிகளின் ஓய்வு வயதை 50 ஆக குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, அதற்கான நடவடிக்கைகளில் தற்போதே துணிச்சலுடன் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அதிரடி அறிக்கையால் சுமார் 40 சதவீதம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT