இந்தியா

பாஜக தலைவர்களுக்கு எதிராக சிபிஐ சோதனை நடத்தாதது ஏன்?

DIN

பாஜக அரசில் அங்கம் வகிப்பவர்கள் மற்றும் அக்கட்சித் தலைவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஏன் சோதனை மேற்கொள்வதில்லை? என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது களங்கம் சுமத்திவிட்டு, பாஜகவினர் அனைவரும் பரிசுத்தமானவர்கள் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க மத்திய அரசு முயலுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். ரயில்வே அமைச்சராக லாலு பதவி வகித்தபோது நிர்வாகரீதியாக சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தில்லியில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது:
லாலு பிரசாத் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் குறித்த விவரங்கள் எதுவும் எனக்கு முழுமையாகத் தெரியாது. எனவே, அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லலை.
அதேவேளையில், இத்தகைய சோதனைகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மட்டும் முடுக்கி விடுவது குறித்து மத்திய அரசிடம் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். பாஜக ஆளும் மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் ஒருவரது இடத்தில் கூட சிபிஐ சோதனை இதுவரை நடைபெறவில்லையே ஏன்?
எதிர்க்கட்சியினர் அனைவரும் களங்கம் நிறைந்தவர்கள்; பாஜகவினர் மட்டும் பரிசுத்தமானவர்கள் என்ற சித்திரிப்பை உருவாக்கத்தானா? இந்த விவகாரத்தில் நாங்கள் எழுப்பும் தொடர்ச்சியான கேள்விகளுக்கு அரசு பதிலளித்தால் நன்றாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT