இந்தியா

ஜியோ வாடிக்கையாளர்கள் 12 கோடி பேரின் தகவல்கள் கசிந்ததா?

DIN


மும்பை: ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது உண்மையில்லை என்று ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.

அதாவது, magicapk என்ற இணையதளத்தில், ரிலையன்ஸ் ஜியோ சிம் வைத்திருக்கும் 12 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்களும் வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, வாடிக்கையாளர்களின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, பகுதி, சிம் கார்ட் ஆக்டிவேட் ஆன தேதி, ஆதார் எண் என அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது

இது குறித்து தனியார் செய்தி இணையதளம் ஒன்று கண்டறிந்து முதன் முதலில் செய்து வெளியிட்டது. அதாவது, magicapk என்ற இணையதளத்தில் ஒரு சில எண்களை பதிவு செய்தாலே, தன்னுடைய மற்றும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்களின் முழு விவரங்களும் இதில் வெளியானதாகவும், ஆனால் ஒரு சில ஊழியர்களின் விவரம் வெளியாகவில்லை என்றும் அந்த தனியார் இணையதள நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் தெரிவித்திருந்தார்.

ஆனால், இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் அவர்களது விவரங்கள் வெளியாகாது என்றும் தெரவித்துள்ளது. மேலும், இது குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல் அல்லாமல், ரிலையன்ஸ் ஜியோ, ஆரம்பத்திலேயே சிம் கார்டு பெற ஆதார் எண் அவசியம் என்பதை கட்டாயமாக்கியது.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ 12 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்று தொலைத் தொடர்புத் துறையில் புதிய புரட்சியைப் படைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT