இந்தியா

ஐந்து மடங்கு வேகமாக ஈரத்துணியை உலர வைக்கும் கருவியை உருவாக்கியுள்ள இந்தியர்! 

DIN


அமெரிக்க வாழ் இந்தியரான விஞ்ஞானி விரால் படேல் வெப்பம் இல்லாமல் துவைத்தவுடன் துனிகளை இரண்டுமடங்கு வேகமாக உலர வைக்கக் கூடிய இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார். 

அமெரிக்காவின் டென்னிசிலுள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் வேலைச் செய்யும் விரால் படேல் தனது குழுவுடன் இணைந்துத் துணிகளை மிக வேகமாக உலர வைத்து அதை உடனே அயர்ன் செய்யவும் கூடிய ‘ஆல்ட்ராசோனிக் டிரையர்’ ஒன்றை வடிவமைத்துள்ளார். நாம் தற்போது சாதரணமாக துணியை சலவைச் செய்து, காய வைத்துப் பின்னர் இஸ்திரிச் செய்ய எடுக்கும் நேரத்தை ஐந்து மடங்கு குறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது இது. 

“இது முற்றிலும் புதிய வகையன முறையில் வேலைச் செய்யக் கூடியது. பொதுவாக இப்பொழுது இருக்கும் டிரையர்கள் துணியில் இருக்கும் ஈரத்தை நீராவி ஆக மாற்றி துணிகளை உலரச்செய்யும், ஆனால் இந்த இயந்திரம் வெப்பம் இல்லாமல் துணிகளில் உள்ள ஈரத்தை உரிந்தெடுக்கும் வைகையில் உருவக்கப்பட்டுள்ளது” என்று இதை வடிவமைத்த விரால் கூறியுள்ளார். 

ஆடையில் உள்ள தண்ணீரை ஈர்க்கும் வகையில் அதிர்வலைகளை இந்த இயந்திரம் உருவாக்கும் அதன் மூலம் நீர் மொத்தமாக ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு பின்பு உரிந்து எடுக்கப்படுகிறது. வணிக ரீதியாக ஒரு சில மாற்றங்களை செய்தப் பின்பு இன்னும் இரண்டிலிருந்து ஐந்து வருடத்திற்குள் நுகர்வோரின் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT