இந்தியா

பசு பாதுகாவலர்களை தீவிரவாதிகளுடன் சண்டையிட அனுப்புங்கள்: மோடியை வம்புக்கு இழுத்த சிவசேனா!

PTI

மும்பை: நாடு முழுவதுமுள்ள பசு பாதுகாவலர்களை காஷ்மீர் தீவிரவாதிகளுடன் சண்டையிட எல்லைக்கு அனுப்புங்கள் என்று மோடியை சிவசேனா கேட்டுக் கொண்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை மேற்கொண்டிருந்த குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவினைச் சேர்ந்த பயணிகள் மீது, கடந்த திங்களன்று இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஏழு பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர்.இதனைக் கண்டித்து பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் அதிகார்ப்பூர்வ நாளேடான 'சாம்னா'  தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமர்நாத் தாக்குதல் போன்ற கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடித்து தண்டிப்பதை விட்டுவிட்டு, வெறுமே கண்டனம் தெரிவிப்பது போன்ற  செயல்களில் மட்டுமே இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானை தற்பொழுது சமாளிக்க '56 இன்ச்' மார்பு தேவைப்படுகிறது. (மோடியின் தேர்தல் பிரச்சார பேச்சினை முன்வைத்த கூற்று இது)  

இதுபோன்ற மனித தன்மையற்ற செயலுக்கு மத்திய அரசின் ஒரே பதில் என்பது டிவிட்டரில் இந்த தாக்குதலை கண்டிப்பதுதான். இறந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதும்,வெறுமனே தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதும் மட்டுமே அவர்களை எதிர்த்து போராட உதவுமா? வேண்டுமென்றால் நாடு முழுவதும் உள்ள உங்களது பசு பாதுகாவலர்களை காஷ்மீர் தீவிரவாதிகளுடன் சண்டையிட அனுப்புங்கள்

காஷ்மீரில் நிகழவும் சூழ்நிலையானது நாட்டுக்கே ஆபத்தானதாகும். அங்கு அரசு என்பதே இல்லை. தீவிரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதமே ஆட்சி செய்கிறது. 

அரசியால் சாசனத்தின்படி காஷ்மீருக்கு வழங்கபட்டுள்ள 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்து, காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதனை பாகிஸ்தானுக்கும், உலக நாடுகளுக்கும் காட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT