முகப்பு
இந்தியா

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

சதோரா: காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு- காஷ்மீரின் சதோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அப்பகுதியில் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா? என்பதை கண்டறிய தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

காஷ்மீரின் பாதுகாப்பு நிலை குறித்து அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசிக்க உள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →