இந்தியா

சமாஜவாதி அரசில் அறிமுகப்படுத்தப்பட்ட பயனற்ற திட்டங்களுக்கு செல்லும் நிதி நிறுத்தம்: உ.பி. அமைச்சர்

DIN

முந்தைய சமாஜவாதி அரசில் கொண்டுவரப்பட்ட பயனற்ற திட்டங்களுக்கு செல்லும் நிதி நிறுத்தப்பட்டது என்று உத்தரப் பிரதேச வேளாண் துறை அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
முந்தைய சமாஜவாதி அரசில் கொண்டுவரப்பட்ட பயனற்ற திட்டங்களுக்கு செல்லும் நிதி நிறுத்தப்பட்டுவிட்டது. அந்த நிதி அனைத்தும் ரூ.36ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடிக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும். விவசாயிகளின் தேவைகளை அறிந்து உத்தரப் பிரதேச அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய நிலையையும், வருவாயையும் உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. நிகழாண்டில் வேளாண் துறைக்கு ரூ.67,682 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதுவரை வேளாண் துறைக்காக ஒதுக்கப்பட்ட அதிக தொகை இதுவே ஆகும். முந்தைய அரசு ரூ.29,771 கோடியை வேளாண் துறைக்காக ஒதுக்கியிருந்தது என்று சூர்ய பிரதாப் சாஹி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT