முகப்பு
இந்தியா

ரயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல; அசுத்தமானவை: சிஏஜி அதிர்ச்சி அறிக்கை

இந்திய ரயில்வே துறையால் வழங்கப்பட்டு வரும் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு

இந்தியா

ரயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல; அசுத்தமானவை: சிஏஜி அதிர்ச்சி அறிக்கை

இந்திய ரயில்வே துறையால் வழங்கப்பட்டு வரும் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:29 PM
பகிர்:


புதுதில்லி : இந்திய ரயில்வே துறையால் வழங்கப்பட்டு வரும் கேட்டரிங் சேவை குறித்த அறிக்கையை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வாளர் தணிக்கை பிரிவு (சிஏஜி) இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 21) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சிஏஜி அறிக்கையில், ரயில்வேயால் வழங்கப்படும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. அவைகள் கெட்டுப் போனவையாகவும், அசுத்தமான உணவு வகைகள், மறுசுழற்சி உணவுப் பொருட்கள், பழைய உணவு பொருட்களை சூடேற்றி வழங்கப்படுவதாகவும் உள்ளது. ரயில்நிலையங்களில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்கள் அங்கீகாமற்றவை, காலாவதியானவை விற்பனைக்கு வழங்கப்படுகின்றன.

கேட்டரிங் சேவைகளின் நிர்வாகத்தின் நிச்சயமற்ற நிலை, ரயில்வேயின் கேட்டரிங் கொள்கையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவதே இதற்கு காரணம் என தணிக்கை பிரிவு கண்டுள்ளது.

ரயிலில் சுத்திகரிப்பு மற்றும் சுகாதார வசதிகள் பராமரிக்கப்படுவதில்லை என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. ரயில்களில் மொபைல் அலகுகளில் பணியாற்றும் உணவுப்பொருட்களுக்கான உணவுப்பொருட்களை வழங்குவதில்லை, அப்படியே வழங்கப்படும் உணவு பொருள்களின் தரத்தில் பல குறைபாடுகளும் உள்ளன.

சிஏஜி அணி மற்றும் ரயில்வே நிர்வாகிகள் இணைந்து 74 ரயில்நிலையங்களிலும் 80 ரயில்களில் நடத்திய கூட்டு ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு பிறகு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர் குழாய்கள் சுத்தமாக இல்லை. குப்பை தொட்டிகள் வைக்கப்படுவதில்லை, ரயில்வேயால் வழங்கப்படும் உணவுகள் மூடப்படுவதில்லை, ரயில் பெட்டிகளில் கரப்பான்பூச்சிகள், எலிகள், தூசுகள், பூச்சிகள், கொசுக்கள், ஈக்கள் நிறைந்து உள்ளன. தூய்மை மற்றும் சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை என சிஏஜி குழு தெரிவித்துள்ளன.

ரயில்வேயில் கேட்டரிங் சேவைகளை வழங்குவதற்காக புளூபிரிண்ட் தயாரிக்கப்படவில்லை. ரயில்களில் வழங்கப்படும் உணவுப்பொருட்களுக்கு பயணிகளுக்கு ரசீதுகள் அல்லது மொபைல் அலகுகளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் வழங்கப்படுவதில்லை. அச்சிடப்பட்ட மெனு கார்டுகள் மற்றும் வழங்கப்படும் உணவு பொருட்கள் விவரமோ, கேட்டரிங் மேலாளர்கள் பரிசோதிக்கப்பட்டதற்கான எந்தவொரு விவரமும் ரயிலில் கிடைக்கவில்லை.

மேலும், ரயில் பாதைகளில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான எந்த முன்னேற்பாடுக்கான நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவதில்லை என்று அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →