இந்தியா

சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு: தில்லி உயர் நீதிமன்றத்தில் சுனந்தா புஷ்கரின் மகன் மனு

DIN

சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் சுனந்தா புஷ்கரின் மகன் சிவ் மேனன் மனு தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர், தில்லியில் உள்ள ஹோட்டலில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ தலைமையில் புலனாய்வு அமைப்பு, உளவுத் துறை, அமலாக்கத் துறை, தில்லி காவல்துறை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 6}ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 20}ஆம் தேதி விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குறித்த நிலவர அறிக்கையை தில்லி காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மற்றும் அவரது முன்னாள் கணவர் ஆகியோரது மகனும், சசி தரூரின் தத்து மகனுமான சிவ் மேனன், தில்லி உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எஸ்ஐடி விசாரணை கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவ் மேனன், தனது தாயார் மரணம் தொடர்பாக கேள்வியெழுப்ப அவருக்கு உரிமை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை விவரங்களை சமூகவலை தளங்களில் பகிரவும், ஊடகத்திடம் தெரிவிக்கவும், சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரது வழக்குரைஞர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது தாயார் சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான விசாரணையை குறித்த காலத்துக்குள் நடத்தி முடிக்கும்படி, தில்லி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சிவ் மேனன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.எஸ். சிஸ்தானி தலைமையிலான அமர்வு முன்னிலையில் வரும் 24}ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT