இந்தியா

மிர்சாபூர் தேநீர் கடையில் விஷம்: 21 பேருக்கு தீவிர சிகிச்சை

உத்திரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் விஷம் கலந்த தேநீர் குடித்ததில் 21 பேர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

DIN

உத்திரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் ராமசேஷா என்பவர் தேநீர் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் கடையில் தேநீர் அருந்திய 21 பேர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தேநீர் விஷமாக மாறியதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களின் உடல்நலன் மேலும் மேசமடைந்தது.

இதையடுத்து அந்த 21 பேரும் உடனடியாக வாரணாசி அவரச சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த வாரமும் அதே கடையில் தேநீர் அருந்திய 27 பேர் இதேபோன்று திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அடுத்தடுத்த இந்த அதிர்ச்சி சம்பவங்களால் ஔரோரா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அந்த தேநீர் கடையை நடத்தி வரும் ராமசேஷா அங்கிருந்து தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT