முகப்பு
இந்தியா

தலித் வாலிபருடன்  திருமணம்: குடும்பத்தினரால் எரித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமிய கர்ப்பிணி பெண்!

குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி தலித் வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய பெண் ஒருவரை, கர்ப்பிணி என்றும் பாராமல் அவரது குடும்பத்தினரே எரித்துக் கொன்ற சம்பவம்.. 

இந்தியா

தலித் வாலிபருடன்  திருமணம்: குடும்பத்தினரால் எரித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமிய கர்ப்பிணி பெண்!

குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி தலித் வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய பெண் ஒருவரை, கர்ப்பிணி என்றும் பாராமல் அவரது குடும்பத்தினரே எரித்துக் கொன்ற சம்பவம்.. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:41 PM
பகிர்:

பெங்களூர்: குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி தலித் வாலிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய பெண் ஒருவரை, கர்ப்பிணி என்றும் பாராமல் அவரது குடும்பத்தினரே எரித்துக் கொன்ற சம்பவம் கடுமை அதிர்வலைகளை  கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள குண்டகனாலா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பானு பேகம் (21). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த சாயாபண்ண சரணப்பா(24) என்ற தலித் வாலிபரை காதலித்தார். குடும்பத்தினர் எதிர்ப்பால் காதலர்கள்  இருவரும் கோவா சென்று, கடந்த ஜனவரி மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர்   

நான்கு மாதங்களுக்கு பிறகு கர்ப்பிணியான பானு பேகம், இதன் பின்னர் தனது குடும்பத்தினர் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி தனது கிராமத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று கணவருடன் திரும்பியுள்ளார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் ஊர் திரும்பிய அன்று முழுவதும் பானுவுக்கு ம் அவரது குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததுடன்,  சரணப்பாவை விட்டு விட்டு வருமாறும் பானுவை அவரது பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்த வாக்குவாதமானது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. பானுவையும் , சரணப்பாவையும், பானுவின் தாய், சகோதரன் மற்றும் தங்கை ஆகியோர் கூட்டாக சேர்ந்து தாக்கத்  தொடங்கினர்.

தாக்குதலிலிருந்து தப்பித்த சரணப்பா உதவி கோரியும், புகார் அளிக்கவும் காவல் நிலையத்திற்கு சென்றார். ஆனால் அவர் திரும்பி வந்து பார்க்கையில், பானு எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் பல முறை அவர் கத்தியால் குத்தப்பட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து சரணப்பாவின் புகாரின் பேரில் பானுவின் தாய், சகோதரன், தங்கை மற்றும் மாமனார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடி விட்ட பானுவின் மூத்த சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்த தகவல்களை குண்டகனாலா சரக காவல்துறை அதிகாரி பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தங்கள் விருப்பத்திற்கு மாறாக, தலித் வாலிபரை திருமணம் செய்து கொண்ட மகளை, கர்ப்பிணி என்றும் பாராமல் அவரது குடும்பத்தினரே எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →