இந்தியா

இந்திய ஐடி நிறுவனங்களின் எச்1பி விசா விண்ணப்பம் 37 சதவீதம் குறைந்தது

DIN

இந்தியாவில் முன்னணியில் உள்ள 7 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அமெரிக்காவுக்கு அனுப்ப எச்1பி விசா கோரி விண்ணப்பிப்பது கடந்த 2016-ஆம் ஆண்டில் 37 சதவீதம் குறைந்துவிட்டது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு முக்கியமாக இந்தியப் பணியாளர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். எனவே, 2017-ஆம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள், அமெரிக்கா விசா கோருவது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டனைச் சேர்ந்த அமெரிக்க தேசியக் கொள்கைகள் என்ற அரசு சாரா அமைப்பு இது தொடர்பாக கூறியுள்ளதாவது:
கடந்த 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016-ஆம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் 5,436 எச்1பி விசா விண்ணப்பங்களைக் குறைத்துள்ளன. கடந்த ஆண்டில் இந்தியாவின் 7 முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மொத்தம் 9,356 எச்1பி விசாக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், 2016-ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் புதிய எச்1பி விசா கோரி விண்ணப்பிப்பதை 56 சதவீதமும், விப்ரோ நிறுவனம் 52 சதவீதமும், இன்ஃபோசிஸ் நிறுவனம் 16 சதவீதமும் குறைத்துக் கொண்டுள்ளன.
அமெரிக்காவுக்கு வரும் இந்தியப் பணியாளர்கள் உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிக அளவில் பறித்துவிடுகிறார்கள் என்பது சற்று மிகைப்படுத்திதான் கூறப்படுகிறது.
2016-ஆம் ஆண்டில் அமெரிக்க பணியாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்திய நிறுவனங்கள் அனுப்பி வைத்துள்ள பணியாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT