இந்தியா

விமான டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் எண் கட்டாயம்?

விமானங்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இனி ஆதார் எண், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது "பான்' எண் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

DIN

விமானங்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இனி ஆதார் எண், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது "பான்' எண் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது.

இந்த புதிய நடைமுறை அடுத்த 4 மாதங்களுக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்ற திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து 30 நாள்களுக்குள் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் அளித்து டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் அவர்களுடைய அனைத்து விவரங்களும் பயணிகள் பெயர் பதிவுப் பட்டியலில் (பிஎன்ஆர்) இடம்பெற்றுவிடும். இதன்மூலம், விமான நிலையத்தில் "டிஜிட்டல் போர்டிங் பாஸ்' அளிக்க முடியும். காகித டிக்கெட் இன்றி விமான போக்குவரத்து பயணிகளுக்கு சாத்தியப்படும். "டிஜிட்டல் போர்டிங் பாஸ்' விருப்பத் தேர்வு மட்டுமே என்றார் ஜெயந்த் சின்ஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT