இந்தியா

இனி வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!

DIN

புதுதில்லி: இனி நாடு முழுவதும் வங்கிகளில் கணக்கு தொடங்க ஆதார் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:

இனி நாடு முழுவதும் வங்கிகளில் கணக்கு தொடங்க ஆதார் எண் சமர்ப்பிப்பது கட்டாயம். அத்துடன் ரூ.50000-கு மேல் பணப் பரிவர்த்தனைகள் செய்யும் பொழுது கண்டிப்பாக ஆதார் எண்னை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் தற்பொழுது வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை, தங்களது வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைக்கவில்லை என்றால் அந்த கணக்குகள் செயல்படாத கணக்குகள் ஆகி விடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு ஒன்றில் ஆதார் எண்ணை மத்திய அரசின் பல்வேறு சேவைகளுக்கு கட்டாயம் ஆக்கக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பானது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT