இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் விரைவில் பொது வேட்பாளர் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் விரைவில் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் விரைவில் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று இடதுசாரிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பொது வேட்பாளருக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆட்சிபுரியும் பாஜக சார்பில் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்தது. மேலும், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக இவ்வாறு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ராம்நாத் கோவிந்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் அறிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து வரும் 22-ஆம் தேதி ஆலோசனை நடத்தவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்காக, இந்தியக் கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி.ராஜா, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில்குமார் ஷிண்டே, அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ், மகாத்மா காந்தியின் பெயரன் கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

சட்டைநாதா் கோயிலில் சிறப்பு கோ பூஜை

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள்: நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதி இடிப்பு

SCROLL FOR NEXT