முகப்பு
இந்தியா

கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் மறுப்பு

கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை மறுத்துவிட்டது.

இந்தியா

கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் மறுப்பு

கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை மறுத்துவிட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:48 PM
பகிர்:

கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு புதன்கிழமை மறுத்துவிட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் சென்னை, கொல்கத்தா ஆகிய உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்றிய போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அவரது நடவடிக்கையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
விசாரணைக்கு எதிர்ப்பு: அப்போது, நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலும், அரசியல் சாசன அமர்வு உத்தரவின்படி மன நலப் பரிசோதனைக்கு உடன்பட மறுத்ததாலும், நீதிபதியாக இருந்த கர்ணனின் செயலை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அவரைக் கைது செய்து ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைக்க வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலக் காவல் துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகத்துக்கு வந்த கர்ணனை கைது செய்ய மேற்கு வங்க காவல்துறையின் தனிப் படை சென்னை வந்தது. இருப்பினும் கர்ணன் தலைமறைவானதால் அவரைத் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த நிலையில், தனக்கு எதிராக உச்ச நீதிமன்றஅரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் கர்ணன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கேட்டுக் கொண்டார். ஆனால், அந்த மனுவை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்தனர். இந்த நிலையில், கர்ணனின் நீதித் துறை பதவிக் காலம் முடிவுக்கு வந்து அவர் ஓய்வு பெற்றார்.
கர்ணன் ஆஜர்: இந்நிலையில், கோவையில் தங்கியிருந்த கர்ணனை தமிழக காவல்துறை உதவியுடன் மேற்கு வங்க காவல்துறையின் தனிப் படையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து புதன்கிழமை கொல்கத்தாவுக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் எனக் கோரி அவரது சார்பில் வழக்குரைஞர் மாத்யூ ஜெ. நெடும்பறா, உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகளான டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை ஆஜரானார்.
அப்போது அவர், "உச்ச நீதிமன்றத்துக்கு கோû ட விடுமுறை அமலில் உள்ள நிலையில், கர்ணனை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க விடுமுறைக் காலத்தில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு அதிகாரம் உண்டு. எனவே, கர்ணனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்' என்று வாதிட்டார்.
நீதிபதிகள் கருத்து: இதைக் கேட்ட நீதிதிதகள், ' கர்ணனின் விவகாரத்தை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரித்து ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு எல்லோரையும் கட்டுப்படுத்தும். எனவே, விடுமுறைக் காலத்தில் வழக்குகளை விசாரிக்கும் அமர்வு, அரசியல் சாசன அமர்வின் வழக்கை விசாரிக்க முடியாது. அனைத்து நெறிமுறைகளும் சட்டம், நீதிசார் ஒழுங்கு ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டுவை. எனவே, ஜாமீன் மனு மீதான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் கூடும் போது முன்வையுங்கள்' என்று குறிப்பிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →